புனித அந்தோனியார் தினத்தை முன்னிட்டு, ஸ்பெயினில் பாதிரியார்களிடம் ஆசிர்வாதம் பெறும் செல்லப் பிராணிகளின் வீடியோ வைரலாகி வருகிறது.
ஸ்பெயின் மாட்ரிட்டில் உள்ள பாதிரியார்கள் செல்லப் பிராணிகளை ஆசீர்வதிக்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான செல்லப் பிராணிகள் பங்கேற்று ஆசிர்வாதம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
புனித அந்தோனியர் தினத்தையொட்டி, ஸ்பெயினில் செல்லப் பிராணிகளை பாதிரியார்கள் ஆசிர்வதிக்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் அவ்விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் புனித அந்தோனியரால் தங்களது செல்லப் பிராணிகள் ஆசிர்வதிக்கப்படுவதாகவும், இதனால் எந்த நோய் நொடியும் தாக்காமல் தங்களது செல்லப்பிராணிகள் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அந்நாட்டு மக்களால் நம்பப்படுகிறது.
https://twitter.com/ModernEraNews/status/1615626998344187905?s=20&t=KOXJj33Vjhy9_lfXQK_41g
இந்நிகழ்ச்சியில், பூனை, நாய், ஆமை, வெள்ளெலிகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை அதன் உரிமையாளர்கள் தேவாலயத்துக்கு அழைத்து வந்து ஆசிர்வாதம் பெற்றனர். பாதிரியார்கள் புனித நீர் தெளித்து செல்லப் பிராணிகளை ஆசிர்வதித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
-ம.பவித்ரா
,








