தலைநகர் கொல்கத்தாவில் மாசுகட்டுப்பாட்டை குறைக்க மேற்குவங்க அரசு காற்று சுத்திகரிப்பான்களுடன் கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் பேருந்தின் கூறைப்பகுதியில் ’சுத்த வாயு’ எனப்பெயரிடப்பட்ட காற்று சுத்திகரிப்பான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று 20 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது டெல்லி ஐஐடி விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்த முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒவ்வொரு பருவகால மாறுபாடுகளின் போதும் காற்று மாசு எவ்வளவு உள்ளது என்பதை சாதனங்கள் கொண்டு ஆராயும் முயற்சியே இது என மேற்கு வங்க மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் கல்யான் ருத்ரா தெரிவித்துள்ளார். அதோடு கணினியில் இணைக்கப்பட்டுள்ள காற்று வடிகட்டி, பேருந்து அதன் வழித்தடத்தில் நகரும்போது காற்றில் இருக்கும் மாசுக்களை உறிஞ்சி சுத்தமான காற்றை வளிமண்டலத்தில் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று சுத்திகரிப்பான்களுடன் கூடிய இந்த பேருந்துகளை கொண்டு நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் வரை தினசரி மாசு அளவு கண்காணிக்கப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் மேற்கு வங்க மாசுக்கட்டுப்பாடு வாரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.