ஆதிபுருஷ் படத்தைக் காண 10,000 டிக்கெட்களை இலவசமாக வழங்குவதாக காஷ்மீர் ஃபைல்ஸ் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரபாஸின் ஆதிபுருஷ், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் ஆதிபுருஷ் இந்திய இதிகாசமான ராமாயணத்தின் தழுவலாகும். இத்திரைப்படத்தில் க்ரீத்தி சனோன் சீதா தேவியாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.
ஆதிபுருஷ், தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. நீண்ட நாட்களாக இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் கடந்த 6 ஆம் தேது வெளியானது. படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்ட படக்குழு மே 9 ஆம் தேதி ஆதிபுருஷ் ட்ரெய்லரும், ஜூன் 16 ஆம் தேதி திரைப்படமும் வெளியாகும் என்று அறிவித்திருந்தது.
அதன்படி இன்று ஆதிபுருஷ் படத்தின் ட்ரெய்லர் அசத்தலான கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், ஆதிபுருஷ் படத்தைக் காண 10,000 டிக்கெட்களை இலவசமாக வழங்குவதாக காஷ்மீர் ஃபைல்ஸ் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/AbhishekOfficl/status/1666459692816629761?s=20
இதுகுறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில், ‘வாழ்நாளில் ஒருமுறையாவது அனைவரும் கொண்டாட வேண்டிய திரைப்படம் ஆதிபுருஷ் . ஸ்ரீ ராமர் மீதான எனது பக்தியின் காரணமாக தெலுங்கானா முழுவதும் அரசுப் பள்ளிகள், அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.







