15-வது ஐபிஎல்-ன் 26-வது போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
15-வது ஐபிஎல்-ன் 26-வது போட்டி பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் களம்கண்டன.
இதற்கு முன்பு, மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதியது. அதில் 10 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
அதனைத்தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது, அதில் 23 ரன்கள் வித்தியாசத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதேபோல, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் களம்கண்டன, இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதனைத்தொடர்ந்து, 15-வது ஐபிஎல்-ன் 18-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் களம் கண்டது மும்பை இந்தியன்ஸ் அணி, அதில் 9 பந்துகள் மீதம் இருந்த நிலையில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிபெற்றது.
அதன்பின்னர், பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணி களம் கண்டது அதில், 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.
இதேபோல, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணி களம் கண்டது. அதில் 2 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
அதன்பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது அதில், 3 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
அண்மைச் செய்தி: மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா
தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது அதில் 12 ரன்கள் வித்தியாசத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. பின்னர், டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதியது அதில் 2 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
சமீபத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதியது அதில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளுக்கு 199 ரன்களை எடுத்தது.
இதனால், 200 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளுக்கு 181 ரன்களை எடுத்து, தோல்வியடைந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







