உத்தரபிரதேச மாநிலம் ஹம்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்குப்பின் மணமகன் குடும்பத்தினர் பேருந்தில் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். அந்த பேருந்து 30க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். ஹம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பேருந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த கோர விபத்தில் மணமகனின் தந்தை யூனிஸ் குரேஷி, பேருந்து ஓட்டுநர் அசோக் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த நிலையில் காயமடைந்தவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







