தாஜ்மகாலை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் டிஃப்னி டிரம்ப் அவரது கணவர் மைக்கேல் பௌலோஸுடன் தாஜ்மகாலை பார்வையிட்டார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் டிஃப்னி டிரம்ப் அவரது கணவர் மைக்கேல் பௌலோஸுடன் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார். இந்த ஜோடிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள டிஃப்னி-மைக்கேல் இணை ஆக்ராவில் உள்ள புகழ் பெற்ற தாஜ்மகாலை பார்வையிட்டனர். தாஜ்மகாலின் கட்டிடக்கலையை சுற்றி பார்த்த அவர்கள் புகைப்படங்களையும் எடுத்து கொண்டனர்.

இந்தியாவிற்கு வருகை தரும் முக்கியஸ்தர்கள் உலக அதிசியங்களில் ஒன்றான தாஜ் மகாலை பார்வையிடுவது ஒரு வழக்கமாக உள்ளது. அதன் படி சில நாட்களுக்கு முன்பு இந்தியா வந்த, அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் அவரது மனைவி ஜேனட் ரூபியோ ஆகியோர் தாஜ்மகாலுக்கு வருகை தந்திருந்தனர். பிப்ரவரி 2020-இல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் தாஜ் மஹாலுக்கு வருகை தந்தார்.

2018-இல், இம்மானுவேல் மக்ரோனும் அவரது மனைவி பிரிஜிட் மக்ரோனும் தங்கள் இந்திய வருகையின்போது தாஜ் மஹாலைச் சுற்றிப் பார்த்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.