பும்ரா, சிராஜ் மீது ரசிகர்கள் இனவெறித் தாக்குதல் – இந்திய அணி புகார்

இந்திய வீரர்களை இன ரீதியாக தாக்கிய ரசிகர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

bumrah siraj racial issue

Bumrah, Siraj Face Racial Abuse: சிட்னியில் பும்ரா, சிராஜ் ஆகிய இரு இந்திய வீரர்களையும் ரசிகர்கள் இன ரீதியாக இழிவுப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஒருநாள் தொடரை 1-2 என இந்தியா தோற்றாலும், டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.

தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியில் தோற்ற பிறகு, ரஹானே தலைமையிலான 2வது போட்டியில் அபாரமாக வெற்றிப் பெற்று ஆஸ்திரேலியாவில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது டீம் இந்தியா.

இந்நிலையில், சிட்னியில் 3வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில், முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 338 ரன்களும், இந்தியா 244 ரன்களும் எடுத்தன.

தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுக்க அந்த அணி 197 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்தச் சூழலில், சிட்னி மைதானத்தில் 2வது மற்றும் 3வது நாளில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகிய இருவரையும் இன ரீதியாக ரசிகர்கள் இழிவுப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 3-ஆம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு கேப்டன் ரஹானே, அஷ்வின் ஆகிய இருவரும் நடுவர்கள் பால் ரீஃபல் மற்றும் பால் வில்சன் ஆகியோரிடம் முறையாக புகார் அளித்துள்ளனர்.

அதேபோல், சிட்னி மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய வீரர்களை இன ரீதியாக தாக்கிய ரசிகர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply