நாட்றம்பள்ளி அருகே எருது விடும் திருவிழா!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பல்வேறு இடையூறுகளுக்கு இடையே எருது விடும் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த தெக்கப்பட்டு பகுதியில், பல்வேறு இடையூறுகளுக்கு இடையே எருது விடும் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில்,…

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பல்வேறு இடையூறுகளுக்கு இடையே எருது விடும் திருவிழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த தெக்கப்பட்டு பகுதியில், பல்வேறு இடையூறுகளுக்கு இடையே எருது விடும் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டு வந்து, எருது விடும் போட்டி நடைபெற்றது. மேலும், உறுதிமொழி ஏற்க இவ்விழா தொடங்கியது. இவ்விழாவினை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.
விழாவில் 200-க்கு மேற்பட்ட காளைகளும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும்
பங்கு பெற்றனர். மேலும், விழா குழுவினர் ஒன்று சேர்ந்து எருது விடும் திருவிழாவிற்கு
பாதுகாப்பு பணி வழங்கப்பட்டது. இவ்விழாவில், காவல்துறை, வருவாய்த் துறை,
தீயணைப்புத் துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, எருது
விடும் விழாவிற்கு பாதுகாப்பு அளித்தனர்.

—-கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.