சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்ப்பதற்கு நாளை வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 74வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையடுத்து சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனவே, இந்தாண்டு தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. எனவே சென்னை காமராஜர் சிலை உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தினவிழா நடைபெறும் காமராஜர் சாலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. என எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் நாளை முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.