தமிழக பட்ஜெட் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டிணம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பேட்டியளித்தார். அதில், பட்ஜெட் ஒரு டிஜிட்டல் டிமிக்கி என விமர்சித்துள்ளார். மேலும்,
“பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்துள்ளது. யானை பசிக்கு சோளப்பொரி போல உள்ளது. ஜெண்டில் மேனாக இருந்தால் மக்களை ஏமாற்ற கூடாது. டீசலுக்கு வரி குறைக்காமல் பேருக்காக பெட்ரோல் வரி மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. சிலர் மட்டுமே பயனடையும் பெட்ரோல் விலையை குறைத்துவிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பார்கள். எங்களுடைய ஆட்சியில் நீட் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, ஒரு புறம் சட்ட போராட்டம் நடத்தினாலும் மறுபுறம் நாங்கள் கோசிங் செண்டர் அமைத்தது அதிக மாணவர்கள் தேர்வு எழுத காரணமாக அமைந்தது. நீட் விவகாரத்தை திமுக தவறாக கையாண்டதால், அதிகப்படியானவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை. எடப்பாடி ஆட்சி காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்துள்ளோம்.” என்று கூறியுள்ளார். மேலும்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“நிதி சுமை இருந்த போது, 7வது ஊதிய கமிஷனின் அடிப்படையில் கால தாமதமின்றி ஊதிய உயர்வு வழங்கினோம். தற்போதைய பட்ஜெட் ஒரு டிஜிட்டல் டிமிக்கி. நேற்று ஒன்று, இன்று ஒன்று, நாளை ஒன்று என மாறி மாறி திமுக பேசி வருகிறது. 1996 முதல் 2001 வரை நடந்த திமுக ஆட்சியில் கஜானாவும் காலி, களஞ்சியமும் காலி. சட்டமன்றத்திற்குள் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தால் கடும் எதிர்ப்பை சந்தித்திருப்பார்கள். சொத்து வரி ஏற்றாமல் சிறந்த நிர்வாகம் செய்துள்ளோம். அதுதான் மக்களுக்கான அரசு. கடனை திருப்பி செலுத்தும் சக்தி இருந்ததால்தான் நாங்கள் கடன் வாங்கினோம். அதிமுக ஆட்சியில் கடனை வாங்கி கடனை அடைத்தார்கள். திமுக ஆட்சியில் வாங்கிய கடனை மறைத்துவிட்டனர்.” என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.