300-ஐ கடந்தது இந்திய அணி: ராகுல்- ரஹானே அவுட், ரிஷப்- ஜடேஜா நிதானம்

இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடி சதம் அடித்த கே.எல். ராகுல் ஆட்டமிழந்தார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட்…

இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடி சதம் அடித்த கே.எல். ராகுல் ஆட்டமிழந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்ததை அடுத்து 2 வது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில், கே.எல்.ராகுலும் ரோகித் சர்மா வும் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தனர். ஸ்கோர் 46 ரன்னாக இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது. ரோகித் சர்மா 83 ரன்கள் எடுத்து, ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா 9 ரன்களில் வெளியேற, ராகுலுடன், கேப்டன் விராத் கோலி கைகோர்த்தார்.

இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய ராகுல், தனது 6-வது
சதத்தை நிறைவு செய்தார். ஸ்கோர் 267 ரன்னாக இருந்தபோது விராத் கோலி 42
ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 127 ரன்களுடனும் ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இரண்டாவது பந்திலேயே கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். அவர் 129 ரன்கள் எடுத்தார். அடுத்து ரிஷப் பண்ட், ரஹானேவுடன் இணைந்தார். நன்றாக ஆடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அடுத்த ஓவரிலேயே ரஹானே ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து ஜடேஜா வந்துள்ளார். ரிஷப் பண்டும் ஜடேஜாவும் ஆடி வருகின்றனர்.

103 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.