பட்ஜெட் 2023 ல் இந்தியாவின் வளர்ச்சிக்கு AI சிறப்பு மையங்களை உருவாக்க உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வருமான வரி விலக்குக்கான வரம்பு உயர்த்தப்பட்டது, உள்கட்டமைப்புக்கான முதலீடு அதிகரித்துள்ளது, பெண்களுக்குத் தனி சேமிப்பு திட்டம் என பல அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனுடன், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை (AI) மேம்படுத்துவதற்காக மூன்று சிறப்பு மையங்களை உருவாக்க உள்ளதாக என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்தியாவில் AI ஐ உருவாக்குவதையும், AI ஐ நாட்டின் வளர்ச்சிக்கு வேலை செய்வதை உறுதி செய்வதற்காக சிறந்த இந்திய நிறுவனங்களில் மையங்கள் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவுக்கான சிறப்பு மையங்கள் ‘மேக் AI இன் இந்தியா’ மற்றும் ‘மேக் AI வொர்க் இந்தியா’ என்ற திட்டத்தை நனவாக்கும் வகையில் செயல்படும் என்றும் அவர் கூறினார்.