ரசிகர்களுடன் உரையாடி மகிழ்ச்சியில் உணச்சிவசப்பட்ட BTS ஜிமின்!!

உலக புகழ் பெற்ற BTS இசைக்குழு, இசை உலகில் கால்பதித்து 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக தென் கொரியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும்…

உலக புகழ் பெற்ற BTS இசைக்குழு, இசை உலகில் கால்பதித்து 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக தென் கொரியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், அதில் ஒன்றாக BTS குழுவை சேர்ந்த ஜிமின் நேற்று Weverse இல் நேரலையில் வந்து ரசிகர்களுடன் உரையாடினார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தென்கொரியாவை சேர்ந்த BTS இசைக்குழு கடந்த 2010ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டில் பிக் ஹிட் என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் கீழ் புது பரிமாணம் எடுத்து அறிமுகமானது. அன்று முதல் ‘2 கூல் 4 ஸ்கூல்’ என்ற பாடலில் துவங்கி, 2016 ஆம்
ஆண்டில் ‘விங்ஸ்’ என்ற ஆல்பம் மூலம் உலகளவில் புகழ் பெற்று உலகளாவிய இசைசந்தைக்குள் நுழைந்து அமெரிக்காவிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி 6 அமெரிக்க இசை விருதுகள், 5 பில்போர்டு மியூசிக் விருதுகள் மற்றும் 24 கோல்டன் டிஸ்க் விருதுகள், கிராமி விருது உள்ளிட்ட பலவிருதுகளை அள்ளிக்குவித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு BTS தனது 10ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதால்,
இதனையொட்டி தென்கொரிய உள்ளிட்ட பல நாடுகளில் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றது. குறிப்பாக, தென்கொரியாவில் கடந்த சில வாரங்களாக தலைநகர் சியோலில் உள்ள வானளாவிய கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் பிற அடையாள சின்னங்களில் ஊதா நிற ஒளி ஊட்டப்பட்டுள்ளதோடு, சியோல் முழுவதும் உள்ள கட்டிடங்களில் டிஜிட்டல் திரைகளில் BTS வாழ்த்து செய்திகளும் காட்டப்பட்டுள்ளன.

இது தவிர ஆன்லைனில் BTS ரசிகர்களுடன் நேரடி உரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் அங்கங்கே நடைபெற்று வரும் நிலையில், தில் ஒன்றாக BTS குழுவை சேர்ந்த ஜிமின் நேற்று Weverse இல் நேரலையில் வந்து ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் தனது உடல்நலம், உணவுமுறை, தனது வாழ்க்கையைப் பற்றி பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டதோடு, BTS உறுப்பினர்களான J-Hope மற்றும் V aka Kim Taehyung பற்றியும் அதில் பேசி இருந்தார். குறிப்பாக அவரது நண்பர்களுடன் சண்டை இட்ட நிகழ்வு குறித்து ஒரு ரசிகர் கேள்வி எழுப்பிய போது அதை மூடி மழுப்பிய ஜிமின், சில ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு அவர் மீது காட்டிய நிபந்தனை அற்ற அன்பை கண்டு வியந்தார். மற்றும் ஒரு ரசிகர் அவரது அடுத்த ஆல்பம் பற்றி கேட்டபோது, ​​ஜிமின் எந்த விவரங்களையும் வெளியிடாமல் மறுத்துவிட்டார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.