புதுச்சேரியில் ‘லால் சலாம்’ படப்பிடிப்பு…ரஜினியை பார்க்க திரண்ட ரசிகர்கள்…

புதுச்சேரியில் நடைபெற்று வரும் லால் சலாம் படப்பிடிப்பில் கலந்துகொண்டு திரும்பிய நடிகர் ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ஆம் ஆண்டு தனது கணவராக இருந்த நடிகர்  தனுஷ் நடிப்பில்…

புதுச்சேரியில் நடைபெற்று வரும் லால் சலாம் படப்பிடிப்பில் கலந்துகொண்டு திரும்பிய நடிகர் ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ஆம் ஆண்டு தனது கணவராக இருந்த நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படமும், படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடலும் இந்திய அளவில் பிரபலமானதோடு, மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து 2015- ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் ”வை ராஜா வை” என்ற படத்தை இயக்கினார்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை லைகா நிறுவனம்  பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எங்கிற கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக யார் நடிக்கிறார் என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின்  முதல்கட்ட படிப்பிடிப்பு ஏற்கனவே மும்பை, திருவண்ணாமலையில் நடந்து முடிந்தநிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. படிப்பிடிப்பு துவங்கி முதல் 4 நாள்களில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு தனக்குரிய காட்சிகளில் நடித்தார்.

அதனை தொடர்ந்து மற்ற நடிகர்களுக்கான காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ரஜினியின் காட்சிகளை படம்பிடிப்பதற்கான படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது ரஜினிகாந்த் ஒரு ஓட்டலுக்கு செல்லும் போது அவரை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். இதனையடுத்து அவர் தனது ரசிகர்களுக்கு கையசைத்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.