உ.பி.யில் காரை ஹெலிகாப்டராக மாற்றிய சகோதரர்கள்… போலீசார் கொடுத்த ட்விஸ்ட்!

உத்தரப் பிரதேசத்தில் காரை ஹெலிகாப்டர் வடிவத்துக்கு மாற்றிய சகோதரர்கள், அதற்கு பெயின்ட் அடிக்க ஓட்டிச் சென்றபோது போலீஸார் பறிமுதல் செய்தனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் அம்பேத்கர் நகரில் உள்ள பீட்டி காவல் நிலைய எல்லைக்கு…

உத்தரப் பிரதேசத்தில் காரை ஹெலிகாப்டர் வடிவத்துக்கு மாற்றிய சகோதரர்கள், அதற்கு பெயின்ட் அடிக்க ஓட்டிச் சென்றபோது போலீஸார் பறிமுதல் செய்தனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அம்பேத்கர் நகரில் உள்ள பீட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதி கஜூரி பஜார். இப்பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள், ‘மாருதி வேகன் ஆர்’ காரை, ஹெலிகாப்டர் வடிவத்துக்கு மாற்றியுள்ளனர். இவர்கள் பிரத்யேகமாக உருவாக்கிய ‘ஹெலிகாப்டர் கார்’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை கண்ட பலரும் அந்த சகோதரர்களை பாராட்டிய நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இந்த பிரத்யேகமான ஹெலிகாப்டர் காருக்கு பெயின்ட் அடிப்பதற்காக சாலையில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அக்பர்பூர் கோட்வாலி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், வித்தியாசமான தோற்றத்தில் வாகனம் ஒன்று வருவதை கண்டு வியப்படைந்தனர். அந்த பகுதியில் இருந்த மக்களும் இந்தக் கண்டுபிடிப்பைக் கண்டு வியப்படைந்தனர்.

https://twitter.com/priyarajputlive/status/1769332673569538091?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1769332673569538091%7Ctwgr%5E2b4dbb544d4d2ca019887cf7d8a3b0cde9db3ce0%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fbrothers-in-up-s-ambedkar-nagar-convert-maruti-suzuki-wagon-r-into-a-helicopter-police-seize-the-vehicle-101710854884745.html

இந்நிலையில், அந்த ஹெலிகாப்டர் காரை சோதனை செய்ய வேண்டும் என போலீஸார் வழிமறித்தனர். சோதனைக்குப் பின்னர் ஹெலிகாப்டர் காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனால் அதனை வடிவமைத்த சகோதரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸார் ஹெலிகாப்டர் காரை பறிமுதல் செய்தாலும் அந்த சகோதரர்களின் முயற்சிக்கு ஏராளமானோர் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.