தாய்லாந்தில் சவுத் ஆசியா கோப்பைக்கான யோகா போட்டியில் பரிசு பெற்று ஊர் திரும்பிய சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் மாணவன் விக்னேஷ் இவர் தனது ஒன்பதாவது வயதிலேயே யோகா கற்றுக் கொள்ள ஆரம்பித்து போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அப்போதில் இருந்தே இவர் கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலுமே பரிசுகள் வென்றுள்ளார். இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று பல பரிசுகளையும், கோப்பைகளையும், பதக்கங்களையும், பெற்றுள்ளார்.
இவர் தற்போது தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சவுத் ஆசியா கோப்பைக்கான யோகா போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது மற்றும் நான்காவது பரிசையும் வென்றுள்ளார். இதை பெற்று சொந்த ஊரான திருப்புவனத்திர்க்கு வந்த மாணவன் விக்னேஷ்க்கு திருப்புவனம் பொதுமக்கள் மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா







