திருவேற்காட்டில் மக்கள் பயன்பாட்டிற்கு புதிய அரசு பேருந்து இயக்கம் – முன்னாள் அமைச்சர் நாசர் பங்கேற்பு!

திருவேற்காடு நகராட்சியில் மக்கள் பயன்பாட்டிற்காக, புதிய அரசு பேருந்து இயக்கப்பட்டது; இதனை முன்னாள் அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். சென்னை, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட, ஐந்தாவது வார்டு மேல் அனம்பாக்கம் பகுதியில், கடந்த ஐந்தாண்டு…

திருவேற்காடு நகராட்சியில் மக்கள் பயன்பாட்டிற்காக, புதிய அரசு பேருந்து இயக்கப்பட்டது; இதனை முன்னாள் அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

சென்னை, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட, ஐந்தாவது வார்டு மேல் அனம்பாக்கம் பகுதியில், கடந்த ஐந்தாண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து வழித்தடம் , தற்போது மக்கள் கோரிக்கையை ஏற்று மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் தொடங்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான, நாசர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

மேலும், 20 பி என்ற இந்த அரசு பேருந்து அம்பத்தூர் எஸ்டேட் முதல், மேல்
அயனம்பாக்கம், வானகரம், குமணணன்சாவடி வழியாக பூவிருந்தவல்லி
வரை இயக்கப்பட உள்ளது. இந்த புதிய பேருந்து வழித்தடத்தால் பள்ளி, கல்லூரி
செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஏழை பொதுமக்கள் பயன்
பெறுவார்கள் என முன்னாள் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

இந்த புதிய வழித்தட பேருந்தில் எம்எல்ஏ நாசர், வார்டு உறுப்பினர்கள்,
திமுகவினர், பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பயணம் செய்தனர். இதில்,
எம்எல்ஏ நாசர் தன்னுடன் பயணித்தவர்களுக்கு, சேர்த்து 200 ரூபாய் கொடுத்து
பயண சீட்டு பெற்று பேருந்தில் பயணம் செய்தார். மேலும், பள்ளி குழந்தைகளுக்கு
இனிப்பு வழங்கிய எம்எல்ஏ புதிய பேருந்தின் நடத்துனர், ஓட்டுநருக்கும் லட்டு
ஊட்டி விட்டார்.

இந்த துவக்க நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் மூர்த்தி, நகராட்சி ஆணையர்
ஜகாங்கீர் பாஷா, மன்ற உறுப்பினர்கள், போக்குவரத்து துறை அதிகாரிகள்
மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.