இந்தியப் பயணத்திற்கு பிரிட்டன் அரசு தடை!

பிரிட்டனில் கடந்த 19ம் தேதி வெளிநாடுகளுக்குச் சென்று சொந்த நாட்டுக்குத் திரும்பும் அனைவரும் 10 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பிரிட்டன் நாட்டுச் சுகாதார…

பிரிட்டனில் கடந்த 19ம் தேதி வெளிநாடுகளுக்குச் சென்று சொந்த நாட்டுக்குத் திரும்பும் அனைவரும் 10 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பிரிட்டன் நாட்டுச் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறுகையில், பிரிட்டனில் இருந்து வெளிநாட்டுக்குப் பயணம் செய்து பின்னர் நாடு திரும்பிய 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் அதில் பெரும்பாலானோர் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டவர்கள் எனக் குறிப்பிட்டார். இதனால் அந்நாட்டு மக்கள் இந்தியாவிற்குப் பயணம் செய்ய பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளதாகவும் நாடு திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்ட யாரும் பிரிட்டன் நாட்டிற்குள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை அடிப்படையில், இந்தியாவிற்கு அந்நாட்டு மக்கள் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் 23ம் தேதியிலிருந்து பிரிட்டனில் அமல்படுத்தப்படும் என அவர் கூறினார். மேலும் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.