பொள்ளாச்சி பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டி வேங்கை செல்வ பிரபு என்பவர் நிலத்திற்கு DTCP ஒப்புதல் பெறுவதற்காக தடையில்லா சான்று வழங்க கோரி பொள்ளாச்சி பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
நிலத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக உதவி பொறியாளர் செந்தில்வேல் என்பவர் ரூ 2 லட்சம் கேட்டுள்ளார். முதல் தவணையாக உதவிப் பொறியாளர் செந்தில்வேலிடம் 30,000 கொடுத்துள்ளார். பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் லதா மற்றும் பரிமளா மறைந்து நின்றிருந்தனர்.
இரண்டாவது தவணை பணத்தை உதவி பொறியாளரிடம் வேங்கை செல்வ பிரபு கொடுக்கும் பொழுது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு உதவி பொறியாளர் செந்தில் குமாரை கைது செய்தனர்.
இதனிடையே, அரியலூர் – நகர மேம்பாட்டு குழும துணை இயக்குனர் வீட்டில் 12 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை நகர மேம்பாட்டுக் குழும இணை இயக்குனராக இருப்பவர் தன்ராஜ். அரியலூரில் உள்ள இவரது வீடு, இவருக்கு சொந்தமான மண்டபம் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை 7 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
தன்ராஜ் மகன் நடத்தி வரும் வாணி ஸ்கேன் சென்டரில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தன்ராஜின் வீட்டில் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.








