தமிழகத்தில் மேலும் 1,846 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,846 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தற்போது குரங்கம்மை நோய்…

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,846 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தற்போது குரங்கம்மை நோய் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 79க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள குரங்கம்மை நோய் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த நோய் கட்டுக்குள் இருப்பதாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

புதிய வைரஸ் பரவல் பரவியுள்ளதையடுத்து கொரோனா தொற்று பாதிப்புகளை கண்டறிய ஆர்டிபிஆர் சோதனைகள் அதிகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்புகள் குறித்த விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1846 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை 35,36,092 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 2,225 பேர் கொரானா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 34,83,346 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்று கொரோனாவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.