காலை உணவு திட்டம் – தெலுங்கானா முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு நன்றி. தெலுங்கானாவில் அடுத்த கல்வியாண்டு முதல் காலை உணவுத்திட்டம் அமல்படுத்தப்படும் என்ற உங்களது அறிவிப்பு நிகழ்ச்சியை மேலும் அற்புதமாக்கியது என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு நன்றி. தெலுங்கானாவில் அடுத்த கல்வியாண்டு முதல் காலை உணவுத்திட்டம் அமல்படுத்தப்படும் என்ற உங்களது அறிவிப்பு நிகழ்ச்சியை மேலும் அற்புதமாக்கியது.

புதுமைபென், நான் முதல்வன் மற்றும் தமிழ் புதல்வன் போன்ற எங்கள் முதன்மைத் திட்டங்களைப் பாராட்டுவதன் மூலம், கல்வியில் தமிழ்நாட்டின் முன்னோடிப் பாதை முழு இந்தியாவிற்கும் வழி வகுக்கும் என்பதை நீங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.