உலகில் முதன்முதலாக, அமெரிக்காவில் மருத்துவர்கள் கருவில் இருக்கும் சிசுவுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து புதிய சாதனை படைத்தனர்.
மூளைக்குள் அரிதான ரத்தக் குழாய் இயல்பிற்கு சிகிச்சையளிப்பதற்காக, வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு, அமெரிக்க மருத்துவர்கள் குழு, அற்புதமான மூளை அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளது. இந்த அரிய மூளை பிரச்னை “வீனஸ் ஆஃப் கேலன் குறைபாடு” என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த சிகிச்சை பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையில் நடத்தப்பட்டது.
மூளையிலிருந்து இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளம் சரியாக வளர்ச்சியடையாத போது இந்த நிலை ஏற்படுகிறது. இந்த குறைபாடு நரம்புகள் மற்றும் இதயத்தில் அதிக அளவு ரத்தத்தை அழுத்துகிறது. மேலும் உடல்நலப் பிரச்சினைகளின் அடுக்கை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிசு கருவில் சாதாரணமாக வளர்ந்து கொண்டிருந்தது. வழக்கமான அல்ட்ராசவுண்ட் மூலம், மூளைக்குள் இந்த அரிய இரத்த நாள அசாதாரணம் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் உள்ள பல குழந்தைகளுக்கு இதய செயலிழப்பு அல்லது மூளை பாதிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் உயிர் பிழைப்பதில்லை. உண்மையில், குழந்தையின் இதயம் போராடிக் கொண்டிருந்தது. மேலும் சிதைவு அபாயகரமாக பெரிதாகிக் கொண்டிருந்தது.
எனவே, கர்ப்பத்தின் 34 வாரங்களில், பாஸ்டன் சில்ட்ரன்ஸ் மற்றும் ப்ரிகாமில் உள்ள ஒரு மருத்துவ குழு, தாயின் கருப்பையில் சிசு இருக்கும்போதே, நேரடியாக , குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்துள்ளனர்.







