ஐபிஎல் போட்டி 2023 : 3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்த மும்பை அணி

ஐபிஎல் போட்டி 2023ன் இன்றைய போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி தேர்வு செய்துள்ளது. 2023ம் ஆண்டின் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியா முழுவதும் …

ஐபிஎல் போட்டி 2023ன் இன்றைய போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி தேர்வு செய்துள்ளது.

2023ம் ஆண்டின் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியா முழுவதும்  பல்வேறு நகரங்களில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல்  நடைபெற்று  வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இன்று நடைபெறும் 49வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸை வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

மும்பை அணி வழக்கமாக களமிறங்கும் பட்டியலில் இரண்டு மாற்றங்களை செய்துள்ளது. சென்னை அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை. இப்போட்டியில் மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெறவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில்  5 போட்டியில் வெற்றி, 4 தோல்வி என  11 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. இதேபோல மும்பை அணி 9 ஆட்டங்களில் ஆடி 5-ல் வெற்றி, 4-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் முதலில் களமிறங்கிய மும்பை அணி மூன்று ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்களை இழந்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா, இஷாந்த் கிஸன் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர். 4 ஓவர்களின் முடிவில் 19 ரன்களை அடித்து மும்பை அணி ஆடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.