திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா; 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்…

ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. திருப்பதியில் பிரம்மோற்சவ விழா வருகிற 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, 22-ம் தேதி கருட சேவையும், 23-ம் தேதி தங்க…

ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா வருகிற 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, 22-ம் தேதி கருட சேவையும், 23-ம் தேதி தங்க தேரோட்டமும் நடைபெற உள்ளன.

கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்து வருகின்றனர்.

முக்கிய நிகழ்வான கருட சேவையின் போது நான்கு மாட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.