சூரியனை ஆய்வு செய்ய இருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம்; 4-வது முறையாக உயர்த்தப்பட்ட சுற்றுப்பாதை…

சூரியனை ஆய்வு செய்ய இருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல்1 விண்கலம், கடந்த 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம்…

சூரியனை ஆய்வு செய்ய இருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல்1 விண்கலம், கடந்த 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடையவுள்ளது.

இந்நிலையில், 4-வது முறையாக இதன் சுற்றுவட்ட பாதையை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நடந்தது. பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இதற்கான சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.