இந்திய கடற்படையின், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஏவுகணை 300 கி.மீ தூரத்தில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கவல்லது. இன்று காலை 9:25 மணியளவில் அந்தமான் மற்றும் நிகோபார் பகுதியில் இதற்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்திய கடற்படை கடந்த சில மாதங்களாகவே இந்த ஏவுகணையை சோதனைகளை பல்வேறு கட்டங்களாக நடத்தி வருகிறது.
அந்தமான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை வெற்றியடைந்ததாகவும், இந்த ஏவுகணை இலக்கை குறிவைத்து தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக நிலத்தில் உள்ள இலக்கை தாக்குவதற்கான பிரம்மோஸ் ஏவுகணை பரிசோதனை நடைபெற்றது. இதுவும் அந்தமான் நிக்கோபார் பகுதியிலேயே நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.







