’Priya’s mask’ என்ற பெயரில் காமிக் புத்தகம் மற்றும் திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது.
உலகளவில் காமிக் கதைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலும் இதேமாதிரியான புத்தகங்கள் வெளியாகின்றன. மக்கள் மத்தியில் அதிக வரவேற்புள்ள புத்தகங்களை திரைப்படமாக மாற்றுகின்றனர். அந்தவகையில் இந்தியாவில் பெண் கதாப்பாத்திரத்தை சூப்பர் ஹீரோவாக சித்தரிக்கும் புத்தகம் வெளியானது. இந்த புத்தகத்தின் நான்காவது பதிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
’Priya’s mask’ என்ற பெயர் கொண்ட புத்தகம் இந்த முறை கொரோனாவை மையமாகக் கொண்டு தயாராகிறது. கொரோனாவால் உலகளவில் எழுந்துள்ள சிக்கலை மையமாக வைத்து தயாராகிறது. இந்த புத்தகத்தை திரைப்படமாகவும் எடுத்துள்ளனர். இவை இரண்டும் ஆன்லைன் தளங்களில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு உலகளவில் உள்ள பிரபலங்கள் பலர் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். இந்தியாவில் வித்யா பாலன், ம்ருனால் தாகுர், சரியா கபிர் ஆகியோர் பின்னணி குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.







