சென்னை வளசரவாக்கம் அருகே பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழந்த விவகாரம் குறித்து தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள பள்ளிக்கல்வித்துறை, 6 கேள்விகளுக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தனியார் பள்ளிக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், பள்ளி வாகனங்களுக்கு தனியாக பொறுப்பாளர் நியமிக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், 64 வயதானவரை வாகன ஓட்டுநராக நியமித்தது ஏன்? என்றும், வேன் மோதி சிறுவன் உயிரிழந்த நிலையில், பிற்பகல் வரை தாளாளர் பள்ளிக்கு வராதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: வேன் மோதி உயிரிழந்த சிறுவனின் உடல் இன்று நல்லடக்கம்
பள்ளி வளாகத்திற்குள் உள்ள பேருந்து வழித்தடத்தில் வேகத்தடைகளை அமைக்காதது ஏன்? என்றும் மாணவர்களை ஒழுங்குபடுத்தும் பணியை கவனிக்க தவறியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள பள்ளிக்கல்வித்துறை, மாணவர்கள் வகுப்பறைகளுக்குச் சென்றடைந்தனரா என்பதை பள்ளி முதல்வர் கவனிக்க தவறியது ஏன்? உள்ளிட்ட 6 கேள்விகளுக்கும் பள்ளி நிர்வாகம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








