28.6 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

BGR Energy விவகாரம்: ஒரு நபர் ஆணையம் வேண்டும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

BGR Energy நிறுவனத்துக்கு தரப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றி முழுமையாக விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை அமைத்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் BGR Energy நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க உத்தரவிட்டதாகக் கூறியுள்ளார்.
மேலும், கடந்த 2021, ஏப்ரல் 23-ஆம் தேதி மின்வாரியத்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட BGR Energy நிறுவனத்துக்கு, முதலமைச்சர் சொன்னதாலேயே 4,472 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: சிறுவன் உயிரிழந்த விவகாரம்: தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்

இதேபோல, திமுக அரசு உண்மையிலேயே நேர்மையான அரசாக இருப்பின், 2006-ஆம் ஆண்டு முதல் BGR Energy நிறுவனத்துக்கு தரப்பட்ட ஒப்பந்தங்கள், கமிஷன், நிராகரிப்பு பற்றி முழுமையாக விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை அமைத்திட வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading