வேன் மோதி உயிரிழந்த சிறுவனின் உடல் இன்று நல்லடக்கம்

சென்னை வளசரவாக்கம் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் வேன் மோதி உயிரிழந்த சிறுவனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. சென்னை வளசரவாக்கம் அருகே ஆழ்வார் திருநகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று…

சென்னை வளசரவாக்கம் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் வேன் மோதி உயிரிழந்த சிறுவனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

சென்னை வளசரவாக்கம் அருகே ஆழ்வார் திருநகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கிய 7 வயது சிறுவன் தீக்ஷித், பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது பள்ளி வாகனத்தை ஓட்டுநர் பின்னால் இயக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் சக்கரத்தில் சிறுவன் சிக்கிக்கொண்டான். இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

சிறுவனின் மரணம் தொடர்பாக, வேன் ஓட்டுநர் பூங்காவனம், வாகன உதவியாளர் ஞானசத்யா, தலைமை ஆசிரியர் தனலட்சுமி மற்றும் பள்ளி தாளாளர் சுபாஸ் ஆகிய 4 பேர் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஓட்டுநர் மற்றும் வாகன உதவியாளரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அண்மைச் செய்தி: “இது ஒரு மகத்தான வெற்றி பயணம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுவன் தீக்ஷித் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது. உடலை வாங்க மறுத்த பெற்றோர், அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், சிறுவனின் உடலை பெற்றுக்கொண்டனர். இதையடுத்து விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு தீக்சித் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபாகர் ராஜா, கணபதி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.