செங்கல்பட்டில் கழிவுநீர் தொட்டியில் 6 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், தனது 6 வயது மகன் பிரதீஷூடன் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, சிறுவன் திடீரென காணாமல் போகவே, சுற்றியுள்ள பகுதியில் அவர் தனது மகனை தேடியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, ஊராட்சி அலுவலக வளாகத்தில் திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் தொட்டியில், சிறுவன் பிரதீஷ் மயங்கிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். வெங்கடாபுரம் ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் தொட்டியை மூடி வைக்காமல் அலட்சியமாக இருந்ததே, 6 வயது சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, வெங்கடாபுரம் பஞ்சாயத்து செயலாளர் மற்றும் OHT ஆபரேட்டர் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாதாக, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். தங்களது கடமையில் அலட்சியம் காட்டியதற்காக அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இது சம்பந்தமாக, வெங்கடாபுரம் பஞ்சாயத்து தலைவரிடமிருந்து விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும், செங்கல்பட்டு சப்-கலெக்டர் தலைமையில் விரிவான விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.