இளைஞர்கள் பயன்பெறும் வகையில், சென்னை கோபாலபுரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் சர்வதேச தரத்திலான பாக்சிங் அகாடமி அமைக்கப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், கோபாலபுரத்தில் பாக்சிங் அகடமி அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன், உலகத்தரத்திலான பாக்சிங் அகடமி கருணாநிதி பெயரில் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். அதனை செயல்படுத்தும் விதமாக பாக்சிங் அகடமி அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா







