பச்சை மிளகாய் ஐஸ் கிரீம் சாப்பிட ஆசையா? தயாரிப்பது எப்படி?….

பச்சை மிளகாய் ஐஸ் கிரீம் தயாரிப்பது எப்படி என்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவை ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.  பொதுவாக இந்திய உணவு பழக்க வழக்கங்களில் காரம் அதிக பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டு…

பச்சை மிளகாய் ஐஸ் கிரீம் தயாரிப்பது எப்படி என்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவை ஏராளமானோர் பார்த்து வருகின்றனர். 

பொதுவாக இந்திய உணவு பழக்க வழக்கங்களில் காரம் அதிக பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மிதமான காரம் சாப்பிடும் நிலையில், ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் கேட்கவே வேண்டாம் . அங்குள்ள மக்கள் அதிக கார உணவுகளை விரும்பி சுவைக்கின்றனர். இதில் மிளகாய் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அப்படிப்பட்ட காரமான பச்சை மிளகாயை சேர்த்து தெருவோர கடைக்காரர் ஒருவர் தயாரித்துள்ள பச்சை மிளகாய் ஐஸ் கிரீம் வீடியோ இன்ஸ்டாவில் லைக்குகளை குவித்து வருகிறது.

“சராஃபா பஜார், இந்தூர் என்ற தலைப்புடன் குஷால் என்பவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் பச்சை மிளகாய் ஐஸ் கிரீம் எப்படி செய்வது என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். கேரமல், ஜெம்ஸ், சாக்லேட், தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து தயாரிக்கும் அந்த ஐஸ்கிரீமிற்கு அவர் நூறு ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை சுமார் 2.4 லட்சம் பேர் பார்த்துள்ள நிலையில் விமர்சனங்களும் எழுந்துள்ளது.

எனக்கு காரமான உணவுகள் மிகவும் பிடிக்கும் . ஆனால் என் வாழ்க்கையில் இந்த முட்டாள்தனமான விஷயத்தை முயற்சி செய்ய துணியமாட்டேன் என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர் இந்த ஐஸ்கிரீமை என் எதிரிகளுக்கு கூட தரமாட்டேன் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.