போராடித் தோற்ற விகாஸ் கிரிஷன்

ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் தோல்வியடைந்தார். இன்று மாலை 4.15 மணிக்கு 69 கிலோ குத்துச்சண்டை பிரிவுக்கான முதல் சுற்று நடைபெற்றது. அப்போது ஜப்பான் வீரர் ஒகசாவாவை இந்திய…

ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் தோல்வியடைந்தார்.

இன்று மாலை 4.15 மணிக்கு 69 கிலோ குத்துச்சண்டை பிரிவுக்கான முதல் சுற்று நடைபெற்றது. அப்போது ஜப்பான் வீரர் ஒகசாவாவை இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் எதிர்கொண்டார். முதல் சுற்றில் ஒகசாவாவை இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் 3 முறை எதிர்கொண்டார். மூன்று முறையும் ஜப்பான் வீரரின் ஆட்டம்தான் மேலோங்கி இருந்தது. மிகவும் விறுவிறுப்பாக ஆட்டம் சென்றது. தன்னால் முடிந்தவரை விகாஸ் கிரிஷன் ஒகசாவாவை எதிர்கொண்டார். ஆட்டத்தில் அவருக்கு முகத்தில் காயம்பட்டு ரத்தம் கொட்டியது.

இரண்டு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனுபவம் கொண்ட விகாஸ். இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவா். மைதானத்தில் நிதானத்தை இழக்காமல் திட்டமிட்டு செயல்படுவதில் விகாஸ் திறமையானவர். அமெரிக்க குத்துச்சண்டை சா்க்கியூட்டிலும் பங்கேற்ற அனுபவம் கொண்ட விகாஸ் கிருஷ்ணனுக்கு இது 3-ஆவது ஒலிம்பிக் போட்டியாகும்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.