முக்கியச் செய்திகள் இந்தியா

தொட்டில்கட்டி 8 கி.மீ தூக்கிச் செல்லப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணி

மலைக்கிராம கர்ப்பிணி ஒருவர், சரியான சாலை வசதி இல்லாததால் 8 கி.மீ தொட்டில்கட்டி மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் பர்வானி பகுதியில் உள்ள ராஜ்புரா என்ற மலைக்கிராமத்தில் வசிப்பவர் சுனிதா. நிறைமாத கர்ப்பிணியான அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர். மகாராஷ்ட்ரா மாநிலஎல்லை அருகே உள்ள இந்த கிராமத்தில் இருந்து கீழே இருக்கும் கிராமத்துக்கு சரியான சாலை வசதி கிடையாது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால் கிராமத்தினர் 15 பேர் சேர்ந்து இரண்டு மரக்கம்புகளில் போர்வையை கட்டி அதில் சுனிதாவை படுக்க வைத்து 8 கி.மீ தூரத்துக்குத் தூக்கி வந்தனர். ஏற்ற இறக்கம் கொண்ட மற்றும் சகதிகள் நிறைந்த பாதை வழியாக அவரை தொட்டில் கட்டி அவர்கள் கஷ்டப்பட்டுத் தூக்கி வந்துள்ளனர்.

கீழே கிராமத்துக்கு வந்ததும் அங்கு ஆம்புலன்ஸ் இருந்தது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பகுதியில் சாலை வசதி வேண்டும் பலருக்கு மனு அளித்தும் எந்தவித பதிலும் இல்லை என்றும் இப்படி கொண்டு வரும் கர்ப்பிணிகள் சிலர், கீழே வருவதற் குள்ளாகவே உயிரிழந்திருப்பதாகவும் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சமூக ஆர்வலரை தாக்கிய பாஜகவினர்

Janani

கொரோனாவால் நாடு முழுவதும் ஒரே நாளில் 509 பேர் உயிரிழப்பு

Halley Karthik

புகைப்பதை நிறுத்துவதால் இத்தனை நன்மைகளா?

EZHILARASAN D