முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் 12டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மதுரை, சிந்தாமணி பகுதியில் தனியார் ரைஸ்மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை சிந்தாமணியிலுள்ள தனியார் ரைஸ் மில்லில் ரேஷன் அரிசியை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அனீஷ் சேகருக்கு நேற்றிரவு (23 ஜூலை ) புகார் சென்றது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மதுரை சிந்தாமணி ரைஸ் மில்லில் உள்ள கிட்டங்கை குடிமைபொருள் பறக்கும் படை தாசில்தார்கள் சிவராமன், கிருஷ்ணன் தலைமையில் அலுவலர்கள் சோதனையிட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சோதனையில் 12,000 கிலோ (12 டன்) ரேஷன் அரிசி 600 மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின்போது அலுவலர்களை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோடினர்.இதனையடுத்து அதிகாரிகள் ரைஸ் மில்லுக்கு சீல் வைத்தனர். சோதனையில் 600 மூட்டைகளில் சிக்கிய 12,000 கிலோ இருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தனியார் ரைஸ் மில் உரிமையாளர் முத்துராமலிங்கம் என்பதும், ரேஷன் அரிசியை கடத்தி அதனை ரைஸ் மில்லில் குருணையாக மாற்றி விற்பனை செய்து வந்ததும் அவனியாபுரம் காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கடற்கரையில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி

EZHILARASAN D

டெர்ரரா இருக்கே? தன் குட்டியை கொன்றதற்காக 250 நாய்களை கொன்று குவித்த குரங்குகள்!

EZHILARASAN D

ஸ்ரீவில்லிபுத்தூரில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

Halley Karthik