‘ஒரு நிமிடம் ஆகாது’ புதினின் மிரட்டல் குறித்து போரிஸ் அதிர்ச்சி தகவல்

உக்ரைனை தாக்குவதற்கு முன்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்ததாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். 2022 -ஆம் ஆண்டு பிப்ரவரி…

உக்ரைனை தாக்குவதற்கு முன்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்ததாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

2022 -ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்குவதற்கு முன்னதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் “ஒரு சாதாரண தொலைபேசி அழைப்பின் போது, என் மீதே ஏவுகணைத் தாக்குதல் நடத்திவிடுவேன்
என்று அச்சுறுத்தியதாக” முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை திங்கட்கிழமை அன்று ஒளிபரப்பப்படவுள்ள ‘புதின் Vs தி வெஸ்ட்‘ என்ற தலைப்பில் பிபிசி ஆவணப்படத்தில் அவர் தெரிவித்தாக கூறப்படுகிறது. மேலும் அவர் அதில் கூறியுள்ள தகவலாக அந்த அழைப்பின் போது போர் ஒரு “முழு பேரழிவாக” இருக்கும் என்று போரிஸ் கூறிய தருணத்தில் தான், புதின் இந்த அச்சுறுத்தும்
வார்த்தையை பேசியதாக பிபிசி தெரிவித்துள்ளது.

குறிப்பாக புதின் பேசும்போது ‘போரிஸ், நான் உன்னை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால், ஒரு ஏவுகணை மூலம், அது நடக்க ஒரு நிமிடம் ஆகாது ” என்ற தோனியில் தான் அவர் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் போரிஸ் உக்ரைன் மீது படையெடுப்பது மேற்கத்திய பொருளாதாரத் தடைகளுக்கு வழிவகுக்கும் என்றும், ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோ படைகள் அதிக அளவில் குவிக்கப்படும் என்றும் புதினுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் பிபிசி கூறியுள்ளது.

இது தவிர எதிர்காலத்தில், உக்ரைன் நேட்டோவில் சேராது என்று புதினிடம் கூறி
ரஷ்ய இராணுவ நடவடிக்கையைத் தடுக்கவும் போரிஸ் முயன்றார் என்றும் பிபிசி தெரிவித்துள்ளது. இந்த தகவல்களை தொகுத்து வந்துள்ள ‘புதின் Vs தி வெஸ்ட்’ என்கிற இந்த ஆவணப்படம் உலகத் தலைவர்களுடன் புதின் எந்த மாதிரியான தொடர்புகளை வைத்திருந்தார் என்பதை ஆராய்கிறது. தற்போது பிரிட்டிஷ் முன்னாள்
பிரதமர் போரிஸ் கூறியுள்ள இந்த தகவல்கள் உலக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.