முக்கியச் செய்திகள் சினிமா

கவனம் ஈர்க்கும் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ மோஷன் போஸ்டர்

இணையத்தில், கவனம் ஈர்க்கும்‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ மோஷன் போஸ்டர்

சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் வடிவேலு நடித்துள்ள திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியானது.

அதன் பிறகு படத்தின் கதைக்கு நகைச்சுவையான திரைக்கதை அமைக்கும் பணிகளில் இயக்குனர் குழுவும், வடிவேலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது.
பெரிய இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடிக்க வருவதால், இந்தத் திரைப்படம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்நிலையில், நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கான பூஜை சென்னையில் நேற்று நடந்து முடிந்தது.நேற்றே, மோஷன் போஸ்டரும் வெளியானது.

வடிவேலு நாய்களுடன் வரும் மோஷன் போஸ்டர் கலக்கலான கலர்ஃபுல் லுக்கில் கவனம் ஈர்க்கிறது. ஹேய் ஹவ் ஆர் யூ என்று வடிவேலு நாய் குலைக்கும் தொனியில் பேசுவது ‘வடிவேலு கம்பேக்’ என்று சொல்ல வைக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்தவாரம் தொடங்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று வெளியான மோஷன் போஸ்டரை தற்போதுவரை 1,951,473 பேர் பார்த்துள்ளனர். 5,255 பேர் தங்களில் கருத்தை பகிர்ந்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

பொது சொத்துக்களை விற்பது தேச நலனுக்கு உகந்தது அல்ல: முதலமைச்சர்

Saravana Kumar

கேரள உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் பணி தீவிரம்!

Jayapriya

ஸ்கிம்மர் கருவி மூலம் பணம் மோசடி செய்த 3 பேர் கைது

Gayathri Venkatesan