முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

அவதூறு வழக்கு: நடிகை கங்கனா மனு தள்ளுபடி

இந்தி பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி, நடிகை கங்கனா ரனாவத் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவை அடுத்து நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட் மீது பல பரபரப்பு புகார்களை கூறியிருந்தார். வாரிசு நடிகர், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, போதைப் பொருள் பயன்பாடு உள்பட பல திடுக் தகவல்களை கூறியிருந்தார். அதோடு கரண் ஜோஹர் உட்பட முன்னணி இயக்குநர்கள் மீது புகார்களை தெரிவித்திருந்தார்.

பிரபல இந்தி திரைப்பட பாடலாசிரியா் ஜாவித் அக்தர் குறித்தும் பேட்டி ஒன்றில், அவர் அவதூறு கருத்தை கூறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கங்கனா மீது அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாவித் அக்தர் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில்,  வழக்கை ரத்து செய்யக் கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் நடிகை கங்கனா ரனாவத் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிமன்றம் கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை எப்போது வெளியாகும்? – ராகுல்

Niruban Chakkaaravarthi

மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு!

Halley karthi

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை அதிகரிப்பு!

Halley karthi