பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும், ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ராகவ் சதாவுக்கும் திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை விளக்கமளித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சதாவுக்கும் திருமணம் என்று பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மும்பை விமான நிலையித்தில் பரினீதி சோப்ராவை சந்தித்த செய்தியாளர்கள், ராகவ் சதாவை நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று சமூகவலைதளங்களில் செய்திகள் வருகிறது. அதற்கு உங்கள் கருத்து என்ன என்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்காமல் சிரித்து கொண்டே காரை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.
மீண்டும் செய்தியாளர்கள் அவரை பின்தொடர்ந்து அதே கேள்வியை கேட்டதற்கு ம்ம்ம்ம்? என்று கூறிவிட்டு காரில் ஏறினார். அதனை உறுதி செய்ய மீண்டும் செய்தியாளர்கள் அதே கேள்வியை மறுபடியும் கேட்டபோது பரினீதி சோப்ரா, தேங் யூ… குட் நைட் என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ராகவ் சதா மற்றும் நடிகை பரினீதி சோப்ரா மும்பையில் ஒரு நட்சத்திர ஹோட்டல் சென்ற புகைப்படம் சமூவ வலைதளங்களில் வைரலானது. அவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக வெள்ளை நிற ஆடையில் வந்திருந்தனர். இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என நெட்டிசன் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தற்போது அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் பரினீதி சோப்ரா சிரித்துக் கொண்டே ம்ம்ம் என பதிலளித்து இருப்பது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது என்றே நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.







