முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

100% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க ஆந்திர அரசு அனுமதி

நூறு சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததை அடுத்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக தியேட்டர்கள், மால்களை திறப்பது உட்பட பல்வேறு விஷயங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தொற்று குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் இப்போது திரும்பி வருகின்றனர்.

கொரோனா காரணமாக 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்களை திறக்க தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்கள் அறிவித்திருந்தன. அதன்படி தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் நூறு சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

தெலங்கானா மாநிலத்தில் ஜூன் மாதம் முதல் நூறு சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்பட்டு வருவதால், ஆந்திராவில் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டன.

ஆயுதபூஜையை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து தியேட்டர்கள், இன்று முதல் நூறு சதவிகித இருக்கைகளுடன் செயல்பட ஆந்திர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதை ஆந்திர மாநில தியேட்டர் உரிமையாளர்களும் திரைப்படத் தயாரிப்பாளர்களும் வரவேற்றுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

நடிகை மீரா மிதுனுக்கு சம்மன்

Halley karthi

உள்ளாட்சி தேர்தல்; அதிமுக சார்பில் இன்று ஆலோசனை

Saravana Kumar

தமிழக முதல்வர்களின் முக்கிய கையெழுத்துகள்!