புற்றுநோய் பாதிப்பிலிருந்து தான் கடந்து வந்தது குறித்து பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.
அண்மையில் வெளியாகியுள்ள கே.ஜி.எப்-2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை உள்ள திரைப்படங்களின் வசூல் சாதனையை இந்த படம் முறியடித்துள்ளது. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில் அவர், புற்றுநோயால் நான் பாதிக்கப்பட்டேன் என தெரிந்ததும் என் மனைவி மற்றும் குழந்தைகளை நினைத்து 3 மணி நேரம் வரை அழுததாகவும், இது ஒரு பெரிய பிரச்னை, இதிலிருந்து எப்படி மீண்டு வரப்போகிறேன் என்பதை நினைத்து கவலையடைந்தேன் என கூறினார்.
மேலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் முடி உதிர்வு, வாந்தி பிரச்னை போன்றவைகளால் அவதிபடுவதை நினைத்து கவலையடைந்தேன். ஆனால் மருத்துவர்கள் இதுபோன்ற பிரச்னைகள் வராது எனவும், படுக்கையில் நீங்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்படாது என சிறு புன்னகையுடன் தெரிவித்தனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு ஹீமோகுளோபின் சிகிச்சை முடிந்த உடனே ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன். அதை தினமும் செய்து வந்தேன். அடுத்தடுத்த சிகிச்சைக்கான துபாய் சென்றேன். அதன்பிறகு 2லிருந்து 3 மணி நேரம் வரை பேட்மிட்டன் விளையாடியதாக பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
2020ம் ஆண்டு அவர் வெளியிட்ட ஒரு பதிவில், தனது உடல்நிலை காரணமாக சிறிது காலத்திற்கு நடிப்பதிலிருந்து விலகி ஓய்வு எடுக்கப்போவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.