ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து பிரஷாந்த் நீல் இயக்கி உலகம் முழுவது சக்கைபோடு போடும் வெற்றிப்படம் கே.ஜி.எஃப். தங்க சுரங்கத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கற்பனை கதை தான் கே.ஜி.எஃப். கச்சிதமான திரைக்கதையும், கதாப்பாத்திர வடிவமைப்பும் இப்படத்தை இந்தியா முழுவதும் கொண்டாட வைத்துள்ளது. இதில் ராக்கி பாயாக வரும் யாஷ், இப்படத்தின் மூலம் உலகப்புகழ் மாஸ் ஹீரோக்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
இப்படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுதா கொங்கரா சூர்யா கூட்டணியில் உருவான சூரரை போற்று வெகுசன மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் சர்வதேச அளவிலான அங்கீகாரமும் பெற்றது. இந்நிலையில் சுதா கொங்கராவிடம் ஹோம்பலே பிலிம்ஸ் கதை கேட்டிருப்பதாகவும், அவர்களுக்கு அக்கதை மிகவும் பிடித்துவிட்டதாகவும் கடந்த சில நாட்களாக தகவல் வந்துகொண்டிருந்த நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
𝐒𝐨𝐦𝐞 𝐭𝐫𝐮𝐞 𝐬𝐭𝐨𝐫𝐢𝐞𝐬 𝐝𝐞𝐬𝐞𝐫𝐯𝐞 𝐭𝐨 𝐛𝐞 𝐭𝐨𝐥𝐝, 𝐚𝐧𝐝 𝐭𝐨𝐥𝐝 𝐫𝐢𝐠𝐡𝐭.
To a new beginning with a riveting story @Sudha_Kongara, based on true events.@VKiragandur @hombalefilms @HombaleGroup pic.twitter.com/mFwiGOEZ0K
— Hombale Films (@hombalefilms) April 21, 2022
சுதா இயக்கும் இப்படத்தில் சூர்யாதான் நடிக்கிறார் என்ற தகவலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சூரரை போற்று, ஜெய் பீம் படங்களின் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் பெரிதாக பேசப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் ஒரு மாஸ் ஹீரோ சப்ஜெட்டில் மாபெரும் வெற்றியை கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் உள்ளராம் சூர்யா. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டு படத்தில் நடித்துவரும் சூர்யா, அப்படத்திற்கான வேலை முடிந்ததும், சுதா கொங்கரா இயக்கும் படத்தின் வேலைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கே.ஜி.எஃப் போன்று ஒரு ‘Pan’ இந்தியா திரைப்படமாக இது இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்தகவலை கேள்விப்பட்ட சூரியா ரசிகர்கள் ‘சலாம் ராஜு பாய்’ என்று ஹார்டின்களை தெறிக்கவிடுகின்றனர்.







