சென்னை ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு!

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் தொழிலாளி ஒருவர் இறந்த நிலையில், மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட…

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் தொழிலாளி ஒருவர் இறந்த நிலையில், மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்த நிறுவனத்தில் இருந்து பெட்ரோலியம், எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  இன்று திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்ததில் 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.  பாய்லர் வெடித்த பகுதியில் 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்துள்ளனர்.  இந்நிலையில், பாய்லருக்கு அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  காயம் அடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெருமாள் என்ற தொழிலாளி பலத்த காயங்களோடு அனுமதிக்கப்பட்ட நிலையல்,  உயிரிழந்துள்ளார்.  இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதோடு,  அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.