பிலிப்பைன்ஸில் படகு கவிழ்ந்து விபத்து ; 13 பேர் உயிரிழப்பு…!

பிலிப்பைன்சில் 300 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

தெற்காசிய நாடுகளில் ஒன்று பிலிப்பைன்ஸ். தீவுக்கூட்ட நாடான பிலிப்பைன்ஸில் வணிகம் மற்றும் மக்கள் பயணத்திற்கு நீர் போக்குவரத்து பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள பசிலன் மாகாணத்தின் கடற்பகுதியில் திங்கட்கிழமை அதிகாலையில் படகு ஒன்று மூழ்கி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக உள்ளூர் செய்தி நிறுவனங்களின் தகவல்படி , சுமார் 300-க்கும் மேற்பட்ட பயணிகளை கொண்ட படகானது நாட்டின் ஜாம்போங்கா நகரத்திலிருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​பசிலன் மாகாணத்தில் உள்ள ஹட்ஜி முஹ்தமத் நகராட்சியில் உள்ள பலுக்பலுக் தீவுக்கு அருகில் படகு மூழ்கியுள்ளது. படகு மூழ்கியதற்கான காரணம்  தெரியவில்லை. இதையடுத்து அரசு சார்பில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 244 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.