முக்கியச் செய்திகள் உலகம்

நாளை வானில் தோன்றும் ‘ரத்த நிலவு’

உலக மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் (Blood Moon) என்றழைக்கப்படும் ‘ரத்த நிலவு’ நாளை வானில் நடக்கவுள்ளது.

வானில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது இந்த அதிசய நிகழ்வான சிவப்பு சந்திர கிரகணம் உண்டாகிறது.

அரிய நிகழ்வு

பொதுவாக ஆண்டுக்கு இரண்டு முதல் ஐந்து முறை சந்திர கிரகணம் நிகழும். ஆனால் முழு சந்திர கிரகணம் என்பது மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே தோன்றும். ஆனால் இந்த முறை அரிய நிகழ்வாக சிவப்பு சந்திர கிரகணமும், சாதாரண சந்திர கிரகணமும் ஒரேநேரத்தில் நிகழவிருக்கின்றன. இதன்காரணமாக இந்த சிவப்பு சந்திர கிரகணத்தை அரிய நிகழ்வு என வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஏன் சிவப்பு நிறம்?

இவ்வாறு தோன்றும் முழுமையான சந்திர கிரகணத்தின் போது நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும். இவ்வாறு நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றுவதற்கு காரணம் வளிமண்டலத்தில் இருக்கும் மாசு துகள்களே காரணமாகும். மாசு துகள்களின் அளவிற்கேற்ப நிலவின் சிவப்பு நிறம் மாறுபடும்.

இதன் காரணமாக இதனை வானியல் ஆய்வாளர்கள் ‘ரத்த நிலவு’ (Blood Moon) என அழைக்கிறார்கள். இந்த முழு சிவப்பு சந்திர கிரகணத்தின் போது நிலவின் அளவு இயல்பைவிட 30% அதிகமாகவும் 14% பிரகாசமாகவும் தோன்றும். அந்த நேரம் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் 3,57,309 கி.மீ ஆக இருக்கும். மற்ற சந்திர கிரகணம் போலவே இதுவும் கிழக்கில் தோன்றி மேற்கில் முடியும். வடக்கு அரைகோளத்தின் வசந்த காலத்தில் நிகழும் கிரகணம் என்பதால் இதனை மலர் நிலவு எனலாம்.

இந்தியாவில் தெரியுமா?

நாளை (மே 26 ) சந்திர கிரகணமானது இந்திய நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி மாலை 6.22 மணிவரை சந்திர கிரகணம் நிகழும். மாலை 4.41 முதல் 4.56 வரை முழுமையாக 15 நிமிடங்கள் முழுமையான சந்திர கிரகணம் நிகழும்.

இந்தியாவில் இந்த சிவப்பு சந்திர கிரகணத்தை பார்க்கமுடியாது. கிரகணம் நிகழும்போது நிலவு கிழக்கு அடிவானத்தில் இருக்கும் என்பதால் இந்தியாவில் இந்த சிவப்பு கிரகணத்தை முழுமையாகப் பார்க்கமுடியாது. ஆனால் வடகிழக்கு பகுதிகளில் மாலை 6.14 மணிக்கு நிலவு தோன்றும் என்பதால் அங்குள்ளவர்களால் சிவப்பு சந்திர கிரகணம் விலகும் சில நிமிடங்களை மட்டும் பார்க்கமுடியும். சென்னையில் நிலவு 6.32 மணிக்கு தோன்றுவதால் இங்கு சந்திர கிரகணத்தைப் பார்க்க வாய்ப்பில்லை.

இத்தகைய முழு சந்திர கிரகணம் இதன்பிறகு 2022- ம் ஆண்டு மே மாதம் நிகழவிருந்தாலும், அது இந்தியாவில் தெரியவாய்ப்பில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். முழு சிவப்பு சந்திர கிரகணம் போல் வரும் டிசம்பர் மாதம் 4-ம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

இந்தியாவுக்கு உதவ தயார் : பிரிட்டன் பிரதமர்

Karthick

வெளியூர் செல்பவர்களுக்காக பேருந்துகள் இன்றும் நாளையும் இயங்கும்!

Karthick

பாலியல் வழக்கின் கருத்துக்கள் தவறாக வெளியிடப்பட்டதாக உச்ச நீதிமன்றம் விளக்கம்!

Karthick