’பாஜகவின் முதல் எதிரி அம்பேத்கர்’

அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முதல் எதிரியாக பாஜக கருதுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன், ரஜினிகாந்தின் மக்களரசு கட்சி இணையும் நிகழ்வு, சென்னை அசோக்…

அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முதல் எதிரியாக பாஜக கருதுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன், ரஜினிகாந்தின் மக்களரசு கட்சி இணையும் நிகழ்வு, சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இணைப்பு நிகழ்வுக்குப் பின் பேசிய அக்கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டை கடந்து ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இயங்கி வருகிறது எனக்கூறினார்.

இன்று கட்சியைத் தொடங்கும் போதே சிலர் முதலமைச்சர் கனவுடன்தான் தொடங்குகின்றனர் என விமர்சனம் செய்த அவர், எனக்கு ஒருபோதும் பதவி ஆசை வந்தது கிடையாது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தேசத்தை காப்பாற்ற விசிகவின் தேவை கட்டாயமாகியுள்ளதாக அவர் கூறினார். பின்னர், தேசிய அளவில் அம்பேத்கரின் தாக்கம் இருப்பதாகவும் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முதல் எதிரியாக கருதி பாஜக செயல்பட்டு வருவதாகவும் திருமாவளவன் சாடினார். தன்னை சங்கர மடத்துக்கு அழைத்து சங்கராச்சாரியார் கட்டி அணைத்து வாழ்த்து சொல்லும் நாளே, அம்பேத்கரின் கனவு நனவாகும் நாள் என அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.