நல்லாட்சிக் குறியீடு; நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடம்

மத்திய அரசின் நல்லாட்சிக் குறியீட்டில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தயாரித்த 2021-ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டை, நல்லாட்சி தினத்தையொட்டி டெல்லி…

மத்திய அரசின் நல்லாட்சிக் குறியீட்டில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.

நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தயாரித்த 2021-ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டை, நல்லாட்சி தினத்தையொட்டி டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பேசிய அவர்,  மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை எனவும் அது தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் எனவும் தெரிவித்தார். இந்த நல்லாட்சிக் குறியீடு விவசாயம், பொது சுகாதாரம், நீதி உள்ளிட்ட 10 துறைகள் மற்றும் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது. இந்தக் குறியீட்டில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.

மேலும், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஆந்திராவும், வணிகத்தில் தெலங்கானாவும், மனித வள மேம்பாட்டில் பஞ்சாப்பும் முதலிடம் வகிக்கின்றன. தொடர்ந்து, பொது சுகாதாரத்தில் கேரளாவும், பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள் துறையில் கோவாவும்; பொருளாதார நிர்வாகத்தில் குஜராத்தும், சமூக நலன் & மேம்பாடு  தெலங்கானா; சுற்றுச்சூழலில் கேரளா; குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை செய்வதில் ஹரியானாவும் முதலிடத்தை பிடித்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.