குஜராத்தில் ஆறு மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர், ஜாம்நகர் ஆகிய மாநகராட்சிகளுக்கு கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியது. அதில் மாலை 5 மணி வரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 576 இடங்களில் 334 இடங்களை பாஜக வெற்றிபெற்றது.
அகமதாபாத் உள்பட ஆறு மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றி உள்ளது. இதில், 36 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சி 12 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இதுகுறித்து, தமது ட்விட்டர் பக்கத்தில் நன்றி குஜராத் என பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்தி மோடி, மாநகராட்சித் தேர்தல் முடிவுகள், வளர்ச்சி மற்றும் நல்லாட்சியின் அரசியல் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.







