வாக்கு எண்ணும் மையங்களுக்கு சந்தேகத்திற்குரிய வாகனங்கள் செல்வதாக பொன்முடி குற்றச்சாட்டு!

வாக்கு எண்ணும் மையங்களுக்கு இரவு நேரங்களில் சந்தேகத்துக்குரிய வாகனங்கள் செல்வதாக திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை, திமுக துணை பொதுச்செயலாளர்கள்…

வாக்கு எண்ணும் மையங்களுக்கு இரவு நேரங்களில் சந்தேகத்துக்குரிய வாகனங்கள் செல்வதாக திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை, திமுக துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, பொன்முடி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சந்தித்து புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, மகளிர் காவலர்களுக்கான கழிப்பறையை கொண்டு செல்வதாகக் கூறி, இரவு நேரங்களில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு சந்தேகத்திற்குரிய வகையில் லாரிகள் செல்வதாக குற்றம்சாட்டினார். மேலும், ராமநாதபுரத்தில் 31 பேர் மடிக்கணினியுடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பொன்முடி, தான் போட்டியிடும் திருக்கோவிலூர் தொகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்குள் மாணவர்களை தேர்வெழுத அனுமதித்திருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் கூறினார். மேலும், திமுக தலைவர் அளித்துள்ள புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாக அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.